தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???





இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்
அதிகாரம் 4. 10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது 

 யோசப் வாசு (ஏப்ரல் 21, 1651 - ஜனவரி 16, 1711) இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குரு
வானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில்யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னிபுத்தளம்மன்னார்பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார். காண்க யோசப் வாசு


தேவனால் இலங்கையில் கத்தோலிககள் ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு தேவனால் அனுப்பட கத்தோலிக்க குருவானவர் யோசப் வாசு என்பதை இலங்கையில் தமிழ் கத்தோலிக்ககள் நன்றியுடன் இந்த வேளையில் நினைவு கூறுகிறேன்.எனவே தமிழ் கத்தோலிக்கர் ஊக்மாக செபிக்கும் போது தேவனின் கோபம் இலங்கை அரசாங்கம் மீது வெளிப்படும் .இதை யர்ரலும் தடுக்க முடியாது ர்தினால் நினைத்தாலும் தடுக்க முடியாது தேவன் நியாயம்  என்று வந்துவிடால் தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் காண்க இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ?
Share:
Read More

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ?

Share:
Read More

இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
பதில்
1. மாதா ஜெபமாலை:
  • “மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.
  • மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.
  • எந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.
2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:
  • கிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.
  • “பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.
  • ஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.
  • ஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.
3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:
  • விசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.
  • அங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.
  • மேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.
  • தூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.
4. நிறைவானதும், குறைவானதும்:

  • நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.
  • ஜெபமாலை செய்வது பாவமல்ல.
  • இருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.
  • பகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.
  • நன்றி  http://www.catholicpentecostmission.in
Share:
Read More

கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்












தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்
நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்
கண்ணின் மணி போல  காக்க வந்துள்ளார்
மக்களினத்தை  மீட்க வந்துள்ளார்
பாவங்களை போகக வந்துள்ளார்
சிறு குடிலில் பிறந்துள்ளார்
ஏழையின் வடிவில்  பிறந்துள்ளார்
ஒளியினை  கொண்டு வருகின்றார்
மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்
குதுகலமாக கொண்டாடுவோம்
புத்தம் புதிய சிந்தையுடன்
மன்னாதி மன்னனை
போற்றி புகழ்ந்டுவோம்  .


என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.
Share:
Read More

செபத்தின் வல்லமை

செபத்தின் வல்லமை
எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?
நிச்சயம் பதில் கிடைக்கும்

Share:
Read More

சமஸ்கிரிதம் மொழியில் கிறிஸ்துவை ஆராதிக்கின்றாதா

சமஸ்கிரிதம் மொழியில்  கிறிஸ்துவை ஆராதிப்போம்
Share:
Read More

வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு song

வல்லவனின் தேவன் என்னோடு 
என்றும் என்றும் என்னோடு 
வல்ல செயல்கள் செய்கின்றார் 
உலகத்தின் ராஜா (2)
நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் 
ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:
Read More

மந்திரவாதிகளின் மன மாற்றம் !!

இந்த மந்திரவாதிகளினால்  தங்களது வாழ்கையை தொலைத்தவர்கள் பல்லாயிரம் பேர் .இவர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் மேலும் பல அற்ப ஆசைகளுக்காக மந்திரம் செய்கின்றனர் .இதோ இரண்டு                  மந்திரவாதிகளின் சாட்சி

Share:
Read More

ஜேசு என்பவர் உண்மை தெய்வமா ?



சரித்திர ஆதரங்களுடன் விளக்கம் தருகின்றார்

Dr. Justin Prabhakaran

Share:
Read More

ஜேசு என்பவர் உண்மை தெய்வமா ?



சரித்திர ஆதரங்களுடன் விளக்கம் தருகின்றார்

Dr. Justin Prabhakaran

Share:
Read More

உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும்,உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து  ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:
Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03



இந்த தொடரின் மூன்றாவது பாகத்தில் வேதாகமத்தின் ஒவொரு வசனத்துக்கும் பல ஆவிக்குரிய மற்றும் மறைமுக அர்த்தம் இருந்தாலும் தற்போது உலகில் நடை பெறும் சம்பவங்கள் வேதத்தின் சொல்லபட்டதன் நிறைவேறுதலே.
அந்த வகையில் தற்போது உலகில் நடை பெறும் சில சம்பவங்களும் அது வேதத்தில் சொல்ல படுள்ளதா? என ஆராய்வோம்.இந்த பதிவு முழுக்க வேத அடிப்படையிலும் தற்காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் அடிபடையிலும் எழுத படுகின்றது .பெண்களை இழிவுபடுத்த எழுத படவில்லை. ஆதியில் பிசாசு மனிதனை பாவத்தில் விழுத்த பெண்ணை பயன்படுத்தினான் என்பது அனைவரும் அறிந்த உண்மை தற்போதும் அதே பாணியையே அவன் பாவிகின்றான் தற்போதைய உலகில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை நிர்வாணபடுத்துவதும் ,விபசாரத்துக்கு உட்படுத்துவதும்   நிர்வாணநடனம் மேலை நாடுகளில் சர்வ சாதரணமாக நடை பெற்று வருகின்றது . இது வேத்தில் உள்ளதா ? காண்க 

 .2 திமோத்தேயு ,அதிகாரம் 03

1 மேலும் இதைத் தெரிந்துகொள்ளும்: இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும்.

2 அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,

3 பரிவில்லாதவர், தீராப் பகையினர், புரணி பேசுபவர், தன்னடக்கமற்றவர், கொடியவர், நல்லதை வெறுப்பவர்,

4 நம்பிக்கைத் துரோகிகள், மூர்க்கர், இறுமாப்புடையவர் என்று இவ்வாறெல்லாம் இருப்பர். அவர்கள் கடவுளை நாடுவதைவிடச் சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர்.

5 பக்தியின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்@ ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.இவர்களுடன் சேராதீர்.

6 இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

7 இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டேயிருந்தாலும் உண்மையைக் கண்டுணர்வதில்லை.

மேலே எப்படி வேத வசனம் நிறைவேறி வருகின்றது என்று பார்த்தோம்.
இப்பொழுது ஐரோப்பாவில் ஒரு நுதன திறந்த மார்புப் பெண்ணியப் போராட்டக் குழுவின்  பிரதான நோக்கம் பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை நிர்வாணபடுத்தியதுடன்  .பல தூசண வார்த்தைகளை உடலியல் எழுதி உலகின் மதங்களை ஒழிப்பதுடன் உலகெங்கிலும் ஓரினபாலுறவை பரப்புவது இவர்களது பிரதான கொள்கை உங்களுக்கா பாரிஸ் தமிழில் இருந்து லிங்க் 
இந்த சம்பவத்துக்கும் வேததுக்கும் என்ன தொடர்பு? என நீங்கள் யோசிக்கலாம் தேவனின் எதிரியான பிசாசு மனித அவதாரம் எடுத்து  அந்தி கிறிஸ்துவாக இந்த உலகத்தில் தோன்ற முன்பு உலகத்தில் உள்ள மதங்கள் அழிக்க பட வேண்டும் மதங்கள் அழிக்கபட்டாலே அந்த வெற்றிடத்துக்கு தன்னை தெய்வமாக மக்களை வணங்க வைக்க முடியும் .எனவே இந்த  பெண்ணியப் போராட்டக் குழு தங்களது  தலைவரின் வருகைக்கு முன்பு உள்ள தடைகளை அகற்றி வருகின்றனர் .அத்துடன் தேவன் அறவே வெறுக்கும் ஓரினபாலுறவை பரப்புவதில் இருந்து இவர்கள் யாருடைய ஊழியர் என தெரிந்து கொள்ளலாம்.இதோ வேத வசனம் 

2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 02

4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 

II பேதுரு 2:18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

திருவெளிப்பாடு
அதிகாரம் 17  
3 தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர் என்னைப் பாலைவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே செந்நிற விலங்கின்மேல் அமர்ந்திருந்த பெண் ஒருத்தியைக் கண்டேன். அந்த விலங்கின் உடலெல்லாம் தூஷணப்பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.

எனவே உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம் என அறிந்து கொள்ளலாம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:
Read More

மகிந்தவுக்கு நீங்களும் தண்டனை கொடுக்கலாம்

சினம் கொண்ட பல தமிழர்களின் முயற்சியால் இணையத்தில் பிரேத்தியக முறையில் ஒரு விளையாட்டு மென்பொருளை தயாரித்துள்ளனர் …ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறி இன்று நாட்டை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷேவை தண்டிபதற்காக இந்த விளையாட்டு மென்பொருள் தயாரித்துள்ளனர் … கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் முகவரியை சொடுக்கி  அவனுக்கு நீங்கள் விரும்பியதுபோல் தண்டனை கொடுங்கள் .. இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு விளையாடி தண்டனை கொடுக்க தவறாதீர் தமிழர்களே..
show your kolaveri
இங்கே http://www.123bee.com/play/show_your_kolaveri/18921.html
Share:
Read More

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது




இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:
Read More

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது




இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:
Read More

இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ?


ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே காங்கிரஸ் இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .அத்துடன் சுப்பிரமணிய சுவாமி போன்றோரை இலங்கைக்கு அனுப்பி தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய காங்கிரஸ் அரசு .
                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை .காண்க உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.இந்  நிலையில் யார் தான் நீதி வழுவாமல் பிரச்னையை கையாளகூடியவர் ?  கத்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே .
          இரண்டு  தனி மனிதன் கொல்லபட்டத்துக்கு  நீதி வழங்க தேவன் இறங்கி வந்து நீதியை வழங்கிய  இரண்டு  சம்பவங்களை தருகிறேன்.

1) காயின்  ஆபேலை கொன்றது 
காண்க 


தொடக்கநூல்
அதிகாரம் 4.
6.    ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7.    நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.
8.    காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். 
9.    ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.
10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. 
11.   இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12.   நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
13.   காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. 


2) தாவீது அரசன் உரியாவின் மனைவி மீது இச்சை கொண்டு அவளை தனது மனைவி ஆக அடைய போர் தர்மத்தை மீறி சதி செய்து உரியாவை 
கொன்றது .
காயின்  ஆபேலை கொன்றது படைப்பின்  தொடக்கத்தில் தேவன் ஆபேல் 
கொலைக்கு  நீதி வழங்கியதை பார்த்தோம் .ஆபேல் கொலை நடந்து  ஆயிரம் ஆண்டுகட்கு பின்னர் தாவீது அரசன் உரியாவை 
கொன்றது . வருகின்றது.
                                             தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின்
அரசன் இதைவிட தேவனின் செல்ல பிள்ளை .இந்த சந்தர்பத்தில் இன்றைய இந்திய அரசு  கூறுவது போல(( இலங்கை எமது நட்பு நாடு எனவே இலங்கை செய்வதை காங்கிரசை போல கண்டுகொள்லாமல் இருக்க பழகுங்கள் என்று தமிழ் நாட்டை வற்புறுத்தி வருகின்றது. .))இதே போல 
தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின் 
அரசன் அதைவிட எனக்கு மிகவும் பிரியமான மகன் நடந்த கொலை எனக்கு மட்டுமே தெரியும்  எனவே நான் இதை கண்டு கொள்ளாமல் இருப்பேன் என்று தேவன் எச் சந்தர்பத்திலும் சொல்லவும் இல்லை அதற்காக தாவீதை நீதி விசாரிக்காமல் இருக்கவும் இல்லை இச்சம்பவம் நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் என்பதற்க்கு வலுவான சாட்சி .
காண்க


10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
                            
                            II சாமுவேல்12 அதிகாரம்

1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.

4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.

14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.


15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.


எனவே என்றும் நீதி மாறாத அந்த உண்மை இறைவனிடம் நடந்த கொலைகளுக்கா நிதிவேண்டி செபிப்பது ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் காலம் இட்ட பணி இதை நிறைவேற்றும்  போது கண்டிப்பாக தேவன் வாருவார். இலங்கை தமிழருக்கு  நீதி வழங்குவார் .இதை உலகில் உள்ள எந்த அரசாலும் தடுக்கமுடியாது .என்னெனில் நம் தேவன்  நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:
Read More

முள்ளிவாய்காலுக்கு முந்திய கனங்கள்


முள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள்.
மத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்” என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் “ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.
ஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கமிருந்து அவருக்கு “மரியாதை” அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும் நிதி வந்து சேர்ந்தது.

நன்றி  தமிழ் வின் 
Share:
Read More

தேவனின் இரக்கம் தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே

இன்று தேவனின் இரக்கம்  தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே.  இன்றே நினிவேயின் மக்கள் உபவாசித்து செபித்து தேவனிடமிருந்து மன்னிப்பை பெற்று கொண்டது இன்றைய நாளே இதனை நினைவு கூறும் முகமாக Orthodox  கிறிஸ்த்தவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள்   செபித்து வருகின்றனர்;.இறைவனது கிருபையால்  நானும் இன்று அதிகாலை அவர்களுடன் செபிக்கும் பாக்கியம் பெற்றேன்.
 நீங்களும் இன்று உங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு அற்புதத்தை பெற்றுகொள்ளுங்கள்; 

காண்க வேதத்தில்

யோனா 3 

பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.
எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.
யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.
அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:
கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.

10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

 

Share:
Read More

கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும்!


இந்த வாரம் உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது. ஆமாம் அன்பர்களே! இந்த பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலை தொடர்பான செய்திகள், வெறுமனே ஒரு அனுதாப அலையை மட்டும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எமக்குண்டு.
இது தொடர்பாக கனடா உதயன் பத்திரிகையின் கதிரோட்டத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்த வாரம் உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது.
ஆமாம் அன்பர்களே!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை பாதுகாப்பு அரண் ஒன்றுக்குள் கொண்டு சென்று, இறுதி நேர பசி தீர்க்க இனிப்புப் பண்டமொன்றை கொடுத்து அவன் அதை சுவைப்பதை பார்த்து பரிகாசம் செய்த பின்னர், துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோரக் காட்சி தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
2009ம் ஆண்டு மே மாதத்தில் நம்மையெல்லாம் கலங்கிக் கண்ணீர் விடச்செய்த முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகள் பற்றிய கோரமான சித்தரிப்புக்களும் சிந்தனைகளும் இன்னும் எம்மை வாட்டிக் கொண்டிருக்கையில் இந்த பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலை தொடர்பான செய்திகள், வெறுமனே ஒரு அனுதாப அலையை மட்டும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எமக்குண்டு.
தமிழீழ மண்ணை நான் கைகளால் அள்ளி எறிந்து என் சுதந்திரத் தாகத்தை தீர்த்துக் கொள்வேன்” என்று தன் தந்தை வழி நின்று, அந்த மண்ணின் சுகத்தை தான் பிறந்த நாள் தொடக்கம் அனுபவித்தவன் தான் இந்த செல்வம் பாலச்சந்திரன்.
வெளிநாடுகள் செல்லவும், ஆடம்பரமாக வாழவும் எத்தனையோ சுகபோக வாய்ப்புக்கள் இருந்தும் பாலச்சந்திரனின் பிஞ்சு உள்ளம் தந்தையின் காலடிக்குள் வளர்ந்தது, ஒரு சுதந்திர வேட்கையோடு. அதுதான் அந்த சிங்களப் படைகளும் சின்னப்பையன் என்று பாராது துப்பாக்கிகளால் மென்மையான அந்த உடலை துளைத்து, துளைத்து துவம்சம் செய்து விட்டன.
பாலகன் பாலச்சந்திரனின் வயதையொத்த பல வன்னிச் செல்வங்கள் வகை தொகையாக எறியப்பட்ட குண்டுகளின் கோரப் பிடிகளுக்குள் சிக்கி தங்கள் உயிர்களை தொலைத்திருப்பார்கள்.
ஆனால் உலகத்தை வியப்பிற்குள் ஆழ்த்திய ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவன் என்ற வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்பை மட்டுமல்ல அரசியலையும் கற்றுக்கொடுக்க அதனைப் பின்வற்றி வாழ்ந்தவன் என்பதனால் சின்னாப் பின்னமாகி விட்டாடன் நமது சின்னவன் பாலச்சந்திரன்.
பாலகனின் சரிந்து கிடக்கும் உடலைப் பார்த்து தமிழ் நாட்டின் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களில் வைகோ அவர்கள் கண்களில் நீர் வடிய தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கின்றார். அந்த உணர்வு மிக்க காட்சியை நாம் காணொலிகளில் கண்டோம். எல்லோரும் அழுதும் அலறியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றார்.
நானும் பேசப் போகின்றேன் என்று சாய்மனைக் கதிரையில் நிமிர்ந்தபடி அமருகின்றார் ஒரு “அநியாயத்திற்கு துணையான தமிழக அரசியல்வாதி” ஆமாம்! கருணாநிதி தனது கருத்துக்களை சொல்லுகின்றார் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக.
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது.
நேற்றைய தினம் வெளியிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விடாத கட்சித் தலைவர்களே தமிழகத்திலே இல்லை.” என்கின்றார்.. ஏற்கெனவே கண்ணிர் விட்ட பழ நெடுமாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்களோடு தன்னையும் சேர்த்துக் கொள்ள முயலுகின்றார் முத்துவேல் கருணாநிதி.
2009ம் ஆண்டு மே மாதம் வரையிலும் நாங்கள் எங்கே இருந்தோம்? இந்த கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதில் சில விடயங்கள் வெளியே வந்தன. பல இரகசிய விடயங்கள் வெளியே வரவில்லை.
ஆனால் வெளிவந்தவையும் வெளியே வராதவையுமாக அநியாயங்களை செய்து கொண்டிருந்த கருணாநிதி இப்போது போலியாக கண்ணீர் விடுகின்றாராம்.. நமக்கு நன்கு தெரியும் கபடத்தனம் கொண்ட கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும் என்று.
முள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள்.
மத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்” என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் “ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டார்கள்.
ஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கமிருந்து அவருக்கு “மரியாதை” அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும் நிதி வந்து சேர்ந்தது.
இறுதியில் நமது மக்கள் அழிக்கப்படும் கொடூரத்தை தன் மனதால் கூட நினைத்துப் பார்ப்பதில்லை என்ற முடிவோடு நிம்மதியாக நித்திரைக்குப் போனார்.
2009ம் ஆண்டு அவரது ஆட்சி தமிழகத்தில். மத்தியில் அவரது கட்சி எம்பிக்கள் பலர் மந்திரிகளாக. ஒரு மந்திரிப் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் ஒரு இலட்சம் தமிழர்களின் உயிர்களை வன்னி மண்ணில் காப்பாற்றியிருக்கலாம். மௌனத்திற்கு மேலாகவும் முதலமைச்சராக அவர் தனது அதிகாரத்தை காட்டினார்.
அந்த நாட்களில் தமிழ் நாட்டு தினசரிகள் பலவற்றின் மீது. இணையத்தளங்களில் பிரசுரமாகிய செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்த தமிழகப் பத்திரிகைகள் மீது அவர் தன் கோபத்தைக் காட்டினார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைச் செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்காதீர்கள். உங்களுக்கு தமிழ் நாட்டுச் செய்திகள் போதாதா? வன்னியின் படுகொலைச் செய்திகளை பிரசுரித்தால் உங்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்படும். மறந்து விடாதீர்கள்” என்று கர்ச்சித்தார் கருணாநிதி.
மேற்கண்டவாறு கருணாநிதியாலும் அவரது உதவியாட்களாலும் எச்சரிக்கப்பட்ட தமிழகத்தின் பத்திரிகையாளர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டார்கள். தங்கள் மொழியைப் பேசும் உறவுகளின் அழிப்பு பற்றிய செய்திகளைக் கூட ஆட்சியில் அமர்ந்திருக்கும் கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! ஏன் என்று தங்கள் வட்டத்திற்குள் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போதுதான் அவர்களிடம் கசிந்து வந்த செய்திகள் கூறி நின்றன. “கோடிக் கணக்கான நிதி அன்பளிப்புகளுக்கு அடங்கிப்போக வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு வந்து விட்டது என்று. அப்போதும் தனது கபடத்தனமான அரசியலால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார்.
அடுத்து வந்த தேர்தலில் பதவியை இழந்து போன கருணாநிதி இப்போது அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார். டெசோ மாநாடு நடத்தப்படும் தனது நோக்கம் பற்றி அண்மையில் தமிழகப் பத்திரிகைகளுக்கு அவர் ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் கூறுகின்ற விடயங்களை நாம் உன்னிப்பாக படிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களை நாமே இனி பாதுகாக்க வேண்டும். அதற்காக அகிம்சை வழியில் போராடிக் கொண்டே இருப்போம்” என்றார் கருணாநிதி. அப்படியானால், கபடம் நிறைந்த கருணாநிதி அவர்களிடம் நாம் கேட்பது இதுதான்.
தமது சொந்த மண்ணிலிருந்த வண்ணம் பலமான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தியபடி இருந்த நமது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படும் போது அதை வேடிக்கை பார்த்தபடியும் மௌனம் காத்தபடியும் இருந்துவிட்டு இப்போது நீங்கள் யாருக்காக அகிம்சை போராட்டம் நடத்தப் போகின்றீர்கள்?
அப்படியானால் தாங்கள் நமக்காக அகிம்சைப் போராட்டம் ஒன்றை தலைமை தாங்கி நடத்துவதற்காகத்தான் விடுதலைப் புலிகள் என்ற மகத்தான விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு துணைநின்றீர்களா ஐயா??. அங்கேயும் தங்கள் கபடத்தனம் தான் முன்னிற்கின்றதா?
கனடா உதயன் - கதிரோடடம்

Share:
Read More

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 01 ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா?  என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம். இந்த புனிதை இப்படி துடி துடிப்பது ஒரு பெண் எந்த உணவையும் உண்ணாமல் 60 வருடங்கள் நற்கருணை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த உண்மை கதை
                               நோன்புகாலத்தில் இந்த காணொளியை முதன் முதலில்  தமிழில் தருவதில் தேடிவந்த தெய்வம் தளம் மகிழ்ச்சி அடைகிறது  எதிர் காலத்தில் இப்படியான முயற்சிக்கு உங்களது ஆதரவில் தங்கியுள்ளது தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் நன்றி
மேலதிக விபரங்கட்கு  http://fr.wikipedia.org/wiki/Marthe_Robin
Share:
Read More

திருப்பலியின் சக்தி என்ன ?

கத்தோலிக்க  திருச் சபையின்  தனித்துவம்  என்ன ? திருப்பலியின்  சக்தி என்ன ?விளக்கம் அளிக்கின்றார் தந்தை பால்றோபின்சன் அவர்கள் 


Share:
Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02

நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? 
பல சரித்திர உண்மையுடனும்  விஞஞானம் விளக்கத்துடனும்  பல திடுக்கிடும்  தகவல் களுடன்    Dr.S.Justin Prabakaran  இடிமுழக்க செய்திகள் இருந்து தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:
Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02

நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? 
பல சரித்திர உண்மையுடனும்  விஞஞானம் விளக்கத்துடனும்  பல திடுக்கிடும்  தகவல் களுடன்    Dr.S.Justin Prabakaran  இடிமுழக்க செய்திகள் இருந்து தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01



உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive