கடைசி நாட்களில் பெண்களின் பங்கு என்ன?
Showing posts with label girls. Show all posts
Showing posts with label girls. Show all posts
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்02
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01
என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.
கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.
பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது.
இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது.
எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும்.
மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.
இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும்.
சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ்.
தொடர்
Recent Posts
Popular Posts
-
உ லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கி...
-
ராஜீவ் காந்தி உயிர்ரோடுடிருகையில் ஈழத் தமிழர் உயிர் குடித்தாய் நீ இறந்தும் லட்ச லட்சமாய் ஈழத் தமிழர்உயிர் குடித்தாய் இன வெறி அரசை ஏவ...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமட...
-
.மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் ...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?" "அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!" " இந்தப் படத்துல வில்...
-
இதயத்துடிப்பினிலே..... எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே! அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம் உம்மைக் காணாது நிலை தடுமாறி ந...
-
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியி...


