நீங்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நபர். எங்கள் நாட்டுக்குள் நீங்கள் செல்ல அனுமதியில்லை மலேசியாவில் இறங்கியதும் விமான நிலையத்தில் வைகோவைப் பார்த்து அந்த அதிகாரி சொன்னார்.
உரிய அனுமதிகள், பரிசோதனைகள், எடுத்துத்தான் மலேசியா செல்வதற்கு அவருக்கு விசா அளிக்கப்பட்டது என்பதால், வைகோ திடுக்கிட்டார்.
நான் முறையான அனுமதி பெற்றுத்தான் வருகிறேன் என ஆவணங்களைக் காட்டுகிறார்.
நீங்கள் இலங்கை குடிமகன்தானே? இது அடுத்த கேள்வி. இல்லை, நான் இந்தியக் குடியுரிமை பெற்றவன். தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்.
நீங்கள் எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர்தானே? நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல. அந்த அமைப்பின் ஆதரவாளன்!
அது தடை செய்யப்பட்ட அமைப்புதானே? அதைப் பற்றி இந்த இடத்தில் உங்களிடம் நான் விளக்கம் அளிக்கவோ, விவாதம் செய்யவோ தயாராக இல்லை. சூடாகிறார் வைகோ.
அதிகாரிகள், உங்களை நாட்டுக்குள் அனுப்ப முடியாது எனச் சொல்லி, ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு நாற்காலியில் உட்காருகிறார் வைகோ. மலேசியாவில் இப்படி வைகோவுக்கு நடப்பது இரண்டாவது முறை.
வைகோவும் மலேசியாவின் பினாங்கு மாகாணத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் இணைந்து பினாங்கில் இரண்டு மாநாடுகள் நடத்தினர்.
ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசு மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு உலகம் முழுக்க நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உலக நாடுகளின் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன.
இது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், வைகோவை எந்த நாட்டுக்கும் போகவிடாமல் செய்யும் வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது.
1989-ம் வருடம் ஈழம் சென்று பிரபாகரனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார் வைகோ. அப்போது பிரபாகரனும் வைகோவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை வைகோ அணிந்து இருப்பது போல படங்களும் எடுக்கப்பட்டன. அதை ஆதாரமாகக்காட்டி, ‘வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்’ என்று சொல்லியிருக்கிறதாம் இலங்கை.
இதை வைத்துத்தான் அவர் மலேசியா வுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.2015-லும் மலேசியாவுக்குள் நுழைய விசா தராமல் இழுத்தடித்தார்கள்.
ஆனால், மலேசிய துணைப் பிரதமர் வரை விஷயத்தைக் கொண்டுச் சென்று அனுமதி வாங்கினார்கள். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, குலசேகரன் எம்.பி ஆகியோர் அதற்கு முயற்சி எடுத்தார்கள்.
அப்போது மலேசிய எம்.பி-க்கள் மத்தியிலும் வைகோ நீண்ட நேரம் பேசினார். அது இலங்கை அரசாங்கத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இம்முறை எப்படியும் உள்ளே விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 9-ம் தேதி அதிகாலை தனிச்செயலர் அருணகிரியுடன் சென்னையிலிருந்து கிளம்பி, மலேசியக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினார்.
அன்று இரவே திருப்பி அனுப்பப்பட்டார். சாப்பிடக்கூட அவரை அனுமதிக்கவில்லை. அருணகிரி மூலமாக வைகோ உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.
கடுப்பான வைகோ அப்படி ஒன்றும் நான் சாப்பிடத் தேவையில்லை எனச் சொல்லி விட்டார். தண்ணீர் மட்டும் வாங்கி குடித்தார்.
மாலையில் இந்தியத் தூதரக அதிகாரி திருமூர்த்தி, வைகோவைத் தொடர்பு கொண்டு, சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? எனக் கேட்டுள்ளார்.
அதையும் கனிவாக மறுத்து விட்டார். 16 மணி நேரம் கழித்து, சென்னையில் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டார்.
இனி வைகோவின் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் சாத்தியம் இல்லை என்றே சொல்கிறார்கள்.
2011 ஜூனில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற வளாகத்தில் இனப் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அப்போதும் இப்படித்தான் நடந்தது.
தொடர்ச்சியாக வைகோவுக்கு தடைவிதிக்கும் வெவ்வேறு நாடுகளின் முடிவுக்குப் பின்னால் இருப்பது இலங்கைதான்.
இது வைகோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதிக்கும் செயல் எனப் பொங்குகிறார்கள், புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள்.
தடையை உடைத்து வைகோவை மலேசியாவுக்குள் அழைத்து வருவேன்’ என்று திருமண விழாவில் சொல்லியிருக்கிறார் ராமசாமி.
ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!
- Vikatan
Recent Posts
Popular Posts
-
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது . வழம...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 5- March 16, 2016
-
பரலோக கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம்
-
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும் யேசுவின் மட்டும் நம்பி பாருங்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்
-
Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.
Blog Archive
-
▼
2017
(67)
-
▼
June
(10)
- அன்ரோயிட் கைப்பேசிகளில் 3 சிம்கள் பயன்படுத்தலாம்!
- ஐரோப்பா வாழ் பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது...
- ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு...
- அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டை...
- சீமானை ஊடகங்களில் காட்டாதீர்
- கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்
- தமிழர்கள் தான் உலகின் மூத்த குடி
- ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!
- Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்ப...
- தொடர்ந்து போராடுவோம் … புழல் சிறையிலிருந்து திருமு...
-
▼
June
(10)
0 comments:
Post a Comment