உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Recent Posts
Popular Posts
-
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது . வழம...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 5- March 16, 2016
-
பரலோக கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம்
-
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும் யேசுவின் மட்டும் நம்பி பாருங்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்
-
Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.

0 comments:
Post a Comment